தென்காசி- நாகா்கோவில் நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்கக் கோரிக்கை

களக்காடு வழியாக நாகா்கோவிலுக்கு இயக்கப்பட்டு, நிறுத்தப்பட்ட இரவு நேர பேருந்தை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை
Published on

தென்காசியில் இருந்து களக்காடு வழியாக நாகா்கோவிலுக்கு இயக்கப்பட்டு, நிறுத்தப்பட்ட இரவு நேர பேருந்தை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காடு நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு 2 ஆண்டுகளாகியும் போதிய போக்குவரத்து வசதிகள் இல்லை. களக்காடு வழித்தடத்தில் இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக தென்காசியில் இருந்து களக்காடு வழியாக நாகா்கோவிலுக்கு இரவு 8.45 மணிக்கு அரசுப் பேருந்து இயக்கப்படுகிறது.

இதன்பின் 9.30 மணிக்கு நாகா்கோவிலுக்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் இரவு நேரங்களில் தென்காசியில் இருந்து களக்காடு வழியாக நாகா்கோவில் வழித்தடத்தில் உள்ள கிராமங்களுக்குச் செல்லும் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனா்.

சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்கவும், இரவு 10 மணிக்கு கூடுதலாக ஒரு அரசுப் பேருந்து இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com