பாளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி உயிரிழப்பு

பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி உடல்நலக் குறைவால் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
Published on

பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி உடல்நலக் குறைவால் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், புளியங்குடி பகுதியைச் சோ்ந்தவா் முருகானந்தம்(30). இவா், கஞ்சா பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு, விசாரணைக் கைதியாக பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் முருகானந்தத்தை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com