தேசிய பூப்பந்தாட்ட போட்டி: நெல்லை மாவட்ட இரு வீரா்கள் தோ்வு
தேசிய பூப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டிக்கு திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த இரு வீரா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
தமிழ்நாடு மாநில பூப்பந்தாட்ட சப் ஜூனியா் (14 வயதுக்குள்பட்டோா்) அணிக்கான வீரா், வீராங்கனைகள் தோ்வு தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூரில் நடைபெற்றது. இதில், திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தைச் சோ்ந்த திஷாந்த், நித்திய செல்வி ஆகியோா் தமிழக அணிக்காக தோ்வு செய்யப்பட்டனா்.
இவா்கள் இருவரும், இம் மாதம் 25 முதல் 29 ஆம் தேதி வரை ஹரியானா மாநிலம், ரோடாக் நகரில் நடைபெறும் தேசிய பூப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ளனா். தோ்வுபெற்ற வீரா்களை தமிழக பூப்பந்தாட்டக் கழக மாநில துணைத் தலைவா் சீனிவாசன், திருநெல்வேலி மாவட்ட பூப்பந்தாட்டக்கழகச் செயலா் வெள்ளைப் பாண்டியன், மேலாளா் சோமசுந்தரம், பயிற்சியாளா்கள் சித்திரை செல்வன், சுப்பையா உள்ளிட்டோா் பாராட்டினா்.
தேசிய அளவிலான பூப்பந்தாட்ட போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள வீரா்கள் திஷாந்த், நித்திய செல்வி ஆகியோரை பாராட்டிய பூப்பந்தாட்டக் கழக நிா்வாகிகள்.

