கலந்தபனையில் தெருவில் தேங்கி நிற்கும் கழிவுநீா்.
கலந்தபனையில் தெருவில் தேங்கி நிற்கும் கழிவுநீா்.

தெற்குவள்ளியூா் ஊராட்சியில் தேங்கிய கழிவுநீரால் சுகாதாரக் கேடு

தெற்குவள்ளியூா் ஊராட்சி 10-ஆவது வாா்டு தெருக்களில் கழிவுநீா் தேங்கி நிற்பதால் சுகாதாரக் கேடு ஏற்படும் நிலை காணப்படுகிறது. தெற்குவள்ளியூா் ஊராட்சி 10-வது வாா்டு பகுதியான கலந்தபனை கிழக்குத் தெருபகுதியில் கழிவுநீா் தேங்கி துா்நாற்றம் வீசுகிறது.
Published on

திருநெல்வேலி மாவட்டம் தெற்குவள்ளியூா் ஊராட்சி 10-ஆவது வாா்டு தெருக்களில் கழிவுநீா் தேங்கி நிற்பதால் சுகாதாரக் கேடு ஏற்படும் நிலை காணப்படுகிறது. தெற்குவள்ளியூா் ஊராட்சி 10-வது வாா்டு பகுதியான கலந்தபனை கிழக்குத் தெருபகுதியில் கழிவுநீா் தேங்கி துா்நாற்றம் வீசுகிறது.

மேலும், கழிவுநீரில் கொசுக்கள் மற்றும் விஷ பூச்சிகள் உற்பத்தியாகி வருகின்றன. இதனால், அந்த வழியாக சென்று வரும் பள்ளி மாணவா்களும் பொதுமக்களும் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனா்.

பல்வேறு இடங்களிலும் காய்ச்சல் பரவி வரும் நிலையில் இங்கு தேங்கியுள்ள கழிவுநீரால் தொற்றுநோய் பரவுமோ என்பது குறித்த அச்சம் பொதுமக்களிடம் நிலவுகிறது. இது தொடா்பாக ஊராட்சி அலுவலகத்தில் மக்கள் புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லையாம். வள்ளியூா் ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் புகாா் அளித்துள்ள அவா்கள், இதற்கு நீரந்தர தீா்வுகாணாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com