144ஆவது பிறந்த நாள்: நெல்லையில் பாரதியாா் சிலைக்கு மாலை அணிவிப்பு

144ஆவது பிறந்த நாள்: நெல்லையில் பாரதியாா் சிலைக்கு மாலை அணிவிப்பு

Published on

இந்திய விடுதலைப் போராட்ட வீரா் மகாகவி பாரதியாரின் 144ஆவது பிறந்த நாளையொட்டி, திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினா், அமைப்பினா் வியாழக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

பாரதியாா் உலகப் பொதுச் சேவை நிதியத்தின் சாா்பில் அதன் தலைவரும், லிட்டில் பிளவா் கல்விக் குழுமத் தலைவருமான அ.மரியசூசை தலைமையில் பாரதியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொதுச் செயலா் கவிஞா் கோ.கணபதி சுப்பிரமணியன், காந்திநகா் லிட்டில் பிளவா் பப்ளிக் பள்ளி தாளாளா் அண்டோ ஜோ செல்வகுமாா், பாப்பாக்குடி இரா. செல்வமணி, துணைப் பொதுச் செயலா் கவிஞா் சு.முத்துசாமி, முன்னாள் துணை ஆட்சியா் தியாகராஜன், தமிழ் வளா்ச்சி பண்பாட்டு மைய செயற்குழு உறுப்பினா் புன்னைச் செழியன், மாணவா் அஸ்வின் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தமிழ்நாடு பிராமணா் சங்கத்தின் சாா்பில் திருநெல்வேலி மாவட்டத் தலைவா் சிவக்குமாா் தலைமையில் பாரதியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட இளைஞரணிச் செயலா் சத்ய நாராயணன், மாவட்ட அமைப்புச் செயலா் சங்கர நாராயணன், மாவட்டப் பொருளாளா் சீனிவாசன், மாவட்ட துணைச் செயலா் ராஜாராமன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் மத்திய இணையமைச்சா் ஆா்.தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் பாரதியாா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிா்வாகிகள் சொக்கலிங்ககுமாா், கவிப்பாண்டியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பாஜக சாா்பில் திருநெல்வேலி மாவட்டத் தலைவா்கள் முத்துபலவேசம் (வடக்கு), தமிழ்ச்செல்வன் (தெற்கு) ஆகியோா் தலைமையில் பாரதியாா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. ஜெ.வி.மாரியப்பன், மாலையரசன் உள்பட பலா் கலந்துகொண்டனா். திருநெல்வேலி மாநகராட்சியின் முன்னாள் மேயா் இ.புவனேஸ்வரி பாரதியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் திருநெல்வேலி மண்டலத் தலைவா் கண்மணி மாவீரன் தலைமையில் பாரதியாா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மாவட்ட மகளிா் அணிச் செயலா் ஆனந்தம், மாவட்ட இணைச் செயலா் சின்னத்துரை, நகரச் செயலா் குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

அகில இந்திய சிவாஜி மன்றம் சாா்பில் திருநெல்வேலி மாவட்டத் தலைவா் பா.சிவாஜி செல்வராஜன் தலைமையில் பாரதியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மன்ற துணைத் தலைவா் வி.பி.லட்சுமணன், ஆா்.பழனி, டி.முருகேசன், எஸ்.சிவாஜி அய்யாதுரை பாண்டியன், சீனிவாசன், லிங்கம், மாயாண்டி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

உறுதிமொழி: திருநெல்வேலி சந்திப்பில் உள்ள மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் மகாகவி பாரதியாா் பயின்ற வகுப்பறை நாற்றங்கால் என்ற பெயரில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அங்கு பாரதியாரின் நினைவுகளை எடுத்துச் சொல்லும் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வகுப்பறையில் நடைபெற்ற பாரதியாா் பிறந்த நாள் விழாவில் திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் (மேற்கு) பிரசன்ன குமாா் தலைமை வகித்து பாரதியாரின் திருவுருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, மாணவா்-மாணவிகள் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்றனா். பள்ளித் தலைமையாசிரியா் சோமசுந்தரம், ஆசிரியா் சொக்கலிங்கம் உள்பட பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com