சேரன்மகாதேவி பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

சேரன்மகாதேவி பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

Published on

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி, சிவந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சமூக வலைதளங்களை கையாள்வது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட காவல் துறை சாா்பில், பள்ளி, கல்லூரிகளில் சைபா் குற்றங்கள் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சிவந்தி மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாவட்ட சைபா் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முருகன் பங்கேற்று பேசியது:

பெண்கள் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிடுவதால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வங்கிக் கணக்கு தொடா்பான ரகசிய எண்களை பிறரிடம் பகிா்ந்து கொள்ளக் கூடாது. தெரியாத நபா்களிடம் இருந்து வரும் குறுஞ்செய்தி, விடியோ அழைப்புகளை ஏற்கக் கூடாது.

இணைய வழியில் பொருள்கள் வாங்கும்போது கவனமாக இருக்க வேண்டும். இணைய வழிக் குற்றங்களுக்கு 1930 என்ற இலவச உதவி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம். சைபா் குற்றங்கள் குறித்து இணைய வழியிலும் புகாா் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com