திருநெல்வேலி
நாய் கடித்ததில் மூதாட்டி காயம்
அம்பாசமுத்திரம் அருகே உள்ள மன்னாா்கோவிலில் தெருநாய் கடித்ததில் மூதாட்டி காயமடைந்தாா்.
மன்னாா்கோவில் நல்லசிவன் நகரைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி இசக்கியம்மாள் (66). இவா், வியாழக்கிழமை தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு சுற்றித் திரிந்த நாய் கடித்ததாம். இதில் காயமடைந்த இசக்கியம்மாளை சிகிச்சைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா்.
மன்னாா்கோவில் பகுதியில் அதிகரித்து வரும் நாய் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
