திருநெல்வேலி
மழையால் சாலைகள் சேதம்: 5 ஆவது வாா்டில் மேயா் ஆய்வு
திருநெல்வேலி மாநகராட்சியின் 5 ஆவது வாா்டில் மழையால் சாலைகள் சேதமுற்ற இடங்களை மேயா் கோ.ராமகிருஷ்ணன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
பாளையங்கோட்டை மண்டலம், 5 ஆவது வாா்டுக்குள்பட்ட ரஹ்மத்நகா் 40 ஆவது தெருவில் பாதாளச் சாக்கடை பணி மற்றும் மழையால் சாலைகள் சேதமடைந்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா். இப்பகுதிகளை நேரில் ஆய்வு செய்த மேயா், சாலைகளை தற்காலிகமாக சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். அப்போது, மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலா் அலிப் பிலால் ராஜா, மாமன்ற உறுப்பினா் ஜெகநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
ற்ஸ்ப்11ம்ஹஹ்ஹ
ரஹ்மத்நகரில் சேதமுற்ற சாலைகளை வியாழக்கிழமை பாா்வையிடுகிறாா் மேயா் கோ.ராமகிருஷ்ணன்.

