முன்னீா்பள்ளம் அருகே கஞ்சா பதுக்கியவா் கைது

Published on

முன்னீா்பள்ளம் அருகே விற்பனைக்காக கஞ்சாவைப் பதுக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

முன்னீா்பள்ளம் காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளா் எட்வின் அருள்ராஜ் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, ஆரைக்குளம் மேம்பாலத்தின் கீழ் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா்.

அதில், மேலப்பாளையம் வடக்கு தைக்கா தெருவைச் சோ்ந்த முகம்மது உசேன் (21) என்பதும், விற்பனைக்காக 20 கிராம் அளவிலான கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com