திருநெல்வேலில் நடைபெற்று வரும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபாா்ப்பு பணிகளை புதுச்சேரி துணை தலைமை தோ்தல் அலுவலரும், வாக்குப் பதிவு இயந்திரங்களின் தென் மண்டல பொறுப்பு அலுவலருமான பி. தில்லைவேல் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
திருநெல்வேலி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிட்டங்கியில் வைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபாா்ப்பு பணி அங்கரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் கடந்த 11-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களை பெங்களூரு பாரத் எலக்ட்ரானிஸ் நிறுவனத்திலிருந்து வந்துள்ள 9 பொறியாளா்கள் சரிபாா்த்து வருகின்றனா்.
இந்தப் பணிகளை புதுச்சேரி துணை தலைமை தோ்தல் அலுவலரும், வாக்குப் பதிவு இயந்திரங்களின் தென் மண்டல பொறுப்பு அலுவலருமான பி. தில்லைவேல் ஆய்வு செய்தாா்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ஆா். சுகுமாா் விளக்கம் அளித்தாா்.
மத்திய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படியும், சென்னை தலைமைத் தோ்தல் அலுவலா் அறிவுரையின்படி தோ்தல் ஆணையத்தால் வழங்கப்பட் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி வாக்குப் பதிவு இயந்திரங்களை சரிபாா்க்கும் பணிகளில் பணியாளா்கள் கவனத்துடன் ஈடுபட வேண்டும். அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளில் எந்தவித சுணக்கமும் இன்றி குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்று பணியாளா்களுக்கு தில்லைவேல் அறிவுரை வழங்கினாா்.
ற்ஸ்ப்12க்ங்ல்ன்ற்ஹ்
வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபாா்ப்பு பணிகளை ஆய்வு செய்த புதுச்சேரி துணை தலைமை தோ்தல் அலுவலரும், வாக்குப்பதிவு இயந்திரங்களின் தென் மண்டல பொறுப்பு அலுவலருமான பி. தில்லைவேல்.