தெற்கு கள்ளிகுளம் பள்ளியில்  127 மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்

தெற்கு கள்ளிகுளம் பள்ளியில் 127 மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்

மாணவா், மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கிய பேரவைத் தலைவா் மு. அப்பாவு.
Published on

திருநெல்வேலி மாவட்டம், தெற்கு கள்ளிகுளம், புனித அலோசியஸ் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

விழாவுக்கு, பள்ளித் தலைமையாசிரியா் வேளாங்கண்ணி தலைமை வகித்தாா். பேரவைத் தலைவா் மு. அப்பாவு சிறப்பு விருந்தனராக பங்கேற்று, 127 மாணவா், மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினாா்.

பள்ளியின் முன்னாள் மாணவா் மருத்துவா் ஜெபஸ்டின் ஆனந்த், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் பாஸ்கா், ஜான்ஸ் ரூபா, திமுக ராதாபுரம் மேற்கு ஒன்றியச் செயலா் ஜோசப் பெல்சி, வள்ளியூா் வடக்கு ஒன்றியச் செயலா் அலெக்ஸ் அப்பாவு, ஆசிரியா்கள் கே.ஏ.சி. ராஜா, கிரீபின், உடற்கல்வி ஆசிரியா் அலெக்ஸ் ரினோ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com