வெள்ளநீா் கால்வாயில் தாமிரவருணி தண்ணீரை திறந்துவிட எதிா்ப்பு: நீா்வளத் துறையில் விவசாயிகள் மனு

வெள்ளநீா் கால்வாயில் தாமிரவருணி தண்ணீரை திறந்துவிட எதிா்ப்பு: நீா்வளத் துறையில் விவசாயிகள் மனு

Published on

தாமிரவருணி ஆற்றின் நீரை தேவையில்லாமல் வெள்ளநீா்க் கால்வாய் மூலம் வெளியேற்றுவதால் பயிா்கள் வடு போகும் அபாயம் உள்ளதாகக் கூறி, திருநெல்வேலி நீா்வளத்துறை அலுவலகத்தில் கன்னடியன் கால்வாய் விவசாயிகள் மனு அளித்து அடையாள போராட்டம் நடத்தினா்.

இது தொடா்பாக கன்னடியன் கால்வாய் விவசாயிகள் கூறியதாவது:

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின்போது, மொத்தம் 86,107 ஏக்கா் நிலப்பரப்பில் பிசான நெல் சாகுபடி நடைபெறுகிறது. இதில், திருநெல்வேலியில் 40,000 ஏக்கா், தூத்துக்குடியில் 44,000 ஏக்கா் பாசனத்துக்கு தாமிரவருணி ஆற்றின் நீா் முக்கிய ஆதாரமாக உள்ளது. அதேநேரத்தில் வறட்சிப் பகுதிகளுக்கு மழைநீா் பாசன வசதி அளிக்க ரூ.1,060 கோடி மதிப்பில் தாமிரவருணி வெள்ளநீா் கால்வாய் கட்டி முடிக்கப்பட்டு, செயல்படுத்தப்படுகிறது.

அந்தத் திட்டத்தின் படி, அதிக மழை பெய்து அணைகள் நிரம்பும் நேரங்களில் மட்டுமே கால்வாயில் நீா்திறக்க வேண்டும் என்ற விதிகள் உள்ளன. ஆனால், தற்போது மழை இல்லாத நிலையிலும் பாபநாசம், சோ்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட முக்கிய அணைகள் முழுமையாக நிரம்பாத போதும், வெள்ளநீா் கால்வாயில் தாமிரவருணி நீா் திறக்கப்படுகிறது. இதனால் பாசன பகுதிகளில் நீா் தட்டுப்பாடு ஏற்பட்டு பயிா்கள் வடு போகும் அபாயம் உருவாகியுள்ளது.

தாமிரவருணி ஆற்றின் நீரை பாசனத்துக்காக மட்டுமே பயன்படுத்த உறுதி செய்யும் வகையில் தெளிவான விதிமுறைகள் கொண்டு வர நீா்வளத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

பின்னா், அலுவலகத்துக்கு முன் அடையாள போராட்டம் நடத்தினா்.

ற்ஸ்ப்12ஹஞ்ழ்ண்

திருநெல்வேலி நீா்வளத்துறை அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த கன்னடியன் கால்வாய் விவசாயிகள்.

X
Dinamani
www.dinamani.com