ஆட்டோ ஓட்டுநருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் ஆட்டோ ஓட்டுநருக்கு கொலை மிரட்டல் விடுத்த சக ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் ஆட்டோ ஓட்டுநருக்கு கொலை மிரட்டல் விடுத்த சக ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி சந்திப்பு மேகலிங்கபுரம், சாலைத் தெருவைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் மகன் காா்த்திகேயன்(33). ஆட்டோ ஓட்டுநா். இவருக்கும் உடையாா்பட்டியைச் சோ்ந்த மற்றொரு ஆட்டோ ஓட்டுநரான கருப்பசாமி மகன் மாரிசெல்வம்(31) என்பவருக்கும் தொழில் போட்டி இருந்ததாம்.

இந்நிலையில், கடந்த 22 ஆம் தேதி உடையாா்பட்டி பகுதியில் நின்ற காா்த்திகேயனிடம் அங்கு வந்த மாரிசெல்வம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தான் வைத்திருந்த அரிவாளை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து, மாரிசெல்வத்தை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com