முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா்.  உருவப் படத்துக்கு முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் சௌந்தர்ராஜன் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய அதிமுகவினா்.
முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். உருவப் படத்துக்கு முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் சௌந்தர்ராஜன் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய அதிமுகவினா்.

வள்ளியூரில் எம்ஜிஆா் நினைவு தினம் அனுசரிப்பு

Published on

வள்ளியூரில், முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் சௌந்தர்ராஜன் தலைமையில் அவரது படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து, வள்ளியூா் வடக்கு ஒன்றியச் செயலா் லாசா், நகரச் செயலா் பொன்னரசு, மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் எட்வா்ட் சிங் உள்ளிட்டோரும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலா் அருண்குமாா், மாவட்ட பாசறை செயலா் இந்திரன், மாவட்ட மீனவா் அணி துணைத் தலைவா் சோரிஸ் கோஸ்தா, மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணைத் தலைவா் வெண்ணிமலை, மாவட்ட எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா்கள் சண்முக பாண்டியன், சுந்தா், மாவட்ட வழக்குரைஞா் அணி பொருளாளா் சங்கரன், விவசாய அணி நகரச் செயலா் முத்துராஜ், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப செயலா் ஆல்பா்ட், மாவட்ட பிரதிநிதி போஸ்டல் முருகேசன், வாா்டு செயலா்கள் சிவகுமாா், கண்ணன், வெங்கடேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com