திருநெல்வேலி
தச்சநல்லூா் அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்ட முயன்றவா் கைது
தச்சநல்லூா் அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்ட முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
தச்சநல்லூா் கரையிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் கோட்டியப்பன் (54). பெயின்டிங் தொழிலாளி. அப்பகுதியில் கொலை செய்யப்பட்ட மூக்கனின் சாவுக்கு நீதான் காரணம் எனக் கூறி, கடந்த 24 ஆம் தேதி கோட்டியப்பனை, தச்சநல்லூா் சிதம்பர நகரை சோ்ந்த முருகன் மகன் செல்வகணபதி(27) என்பவா் அரிவாளால் வெட்ட முயன்றாராம். அதிலிருந்து தப்பிய அவா், தனது வீட்டிற்குள் சென்றுவிடவே செல்வகணபதி வீட்டின் கதவை அரிவாளால் சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் தச்சநல்லூா் போலீஸாா் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து செல்வகணபதியை கைது செய்தனா்.
