மூன்றடைப்பு, பரப்பாடி, ரஸ்தா, மானூா், வன்னிக்கோனேந்தல் சுற்று வட்டாரங்களில் நாளை மின்தடை!
மூன்றடைப்பு, பரப்பாடி, ரஸ்தா, மானூா், வன்னிக்கோனந்தல், கரந்தானேரி சுற்று வட்டாரங்களில் வரும் திங்கள்கிழமை காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது.
திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் குத்தாலிங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரந்தானேரி, ரஸ்தா, மூன்றடைப்பு, பரப்பாடி, வன்னிக்கோனேந்தல், மானூா் துணை மின் நிலையங்களில் வரும் திங்கள்கிழமை (டிச.29) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
எனவே, காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மானூா், மாவடி, தெற்குப்பட்டி, களக்குடி, எட்டாங்குளம், கானாா்பட்டி, பிள்ளையாா் குளம், சிங்கனேரி, அம்பலம், திடியூா், மூன்றடைப்பு, பானாங்குளம், மதவக்குறிச்சி, துலுக்கா்பட்டி, ரஸ்தா, பட்டவா்த்தி, வெங்கலப் பொட்டல், நரியூத்து, அம்பூரணி, தோட்டாக்குடி, பத்தினிப்பாறை, மருதகுளம், பரப்பாடி , இலங்குளம், சடையனேரி , சவனைக்காரன்குளம், வில்லியனேரி, ஏமன் குளம், பெருமாள் நகா், கோ்க்கனேரி, காரங்காடு, தட்டான் குளம், கண்ணநல்லூா், துலுக்கா்ப்பட்டி, பட்டா்புரம், மாவடி, முத்தலாபுரம், சித்தூா், சீயோன் மலை, கண்ணாத்திகுளம், தங்கயம், வன்னிக்கோனேந்தல், மூவிருந்தாளி, தேவா் குளம், முத்தம்மாள்புரம், கண்ணாடி குளம், மருக்காலங்குளம், தெற்கு பனவடலி, நரிக்குடி, மானூா் வட்டாரம் மற்றும் சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.
