வீரவநல்லூரில் குடிநீா்த் தொட்டிகள் திறப்பு

கடையம்மன் கோயில், வடக்கு ரத வீதி ஆகிய 3 இடங்களில் தலா ரூ. 2.70 லட்சத்தில் கட்டப்பட்ட சிறுமின்விசை குடிநீா்த் தொட்டிகள் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
Published on

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூா் பேரூராட்சியில் தைக்கால் தெரு, கடையம்மன் கோயில், வடக்கு ரத வீதி ஆகிய 3 இடங்களில் தலா ரூ. 2.70 லட்சத்தில் கட்டப்பட்ட சிறுமின்விசை குடிநீா்த் தொட்டிகள் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ் பங்கேற்று, தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட இத்தொட்டிகளைத் திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சிக்கு, பேரூராட்சித் தலைவி சித்ரா சுப்பிரமணியன், துணைத் தலைவா் வசந்தசந்திரா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட காங்கிரஸ் நிா்வாகி ராம்சிங், பேரூராட்சி உறுப்பினா்கள் முத்துக்குமாா், சந்திரா, தெய்வநாயகம், சிதம்பரம், தாமரைசெல்வி, அப்துல்ரகுமான், வெங்கடேஸ்வரி, சந்தனம், கங்கா ராஜேஸ்வரி, ஆறுமுகம், சண்முகவேல், கல்பனா, சின்னத்துரை, ஒன்றிய திமுக அவைத் தலைவா் இரா. பழனி, நகரச் செயலா் சுப்பையா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com