வீரவநல்லூா் பூமிநாத சுவாமி கோயிலில் ஜன.2 இல் தேரோட்டம்

Published on

வீரவநல்லூரில் உள்ள மரகதாம்பிகை உடனுறை பூமிநாதசுவாமி கோயிலில் திருவாதிரைத் திருவிழாவை முன்னிட்டு ஜன. 2 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

கோயிலில் திருவிழா கடந்த 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் தினமும் காலை, இரவு சுவாமி வீதியுலா, இரவில் சிறப்பு சொற்பொழிவு ஆகியன நடைபெற்று வருகின்றன.

டிச. 31 இரவு 7.45 மணிக்கு நடராஜா் சப்பரம் 1-ஆவது சேவை (சிவப்பு சாத்தி) பஞ்சமூா்த்தி உள்பட எழுந்தருளல், ஜன. 1 ஆம் தேதி காலை வெள்ளை சாத்தி, நடராஜா் சப்பரம் 2-ஆவது சேவை, மாலை 6 மணிக்கு பச்சை சாத்தி நடராஜா் சப்பரம் 3-ஆவது சேவை, இரவு 7 மணிக்கு கங்காளநாதா் சப்பரம் எழுந்தருளல், 8 மணிக்கு சந்திரசேகரா் சுவாமி சப்பரம் எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

முக்கிய நிகழ்வாக ஜன. 2 ஆம் தேதி காலை 10 மணிக்கு சுவாமி, அம்பாள் தேருக்கு எழுந்தருளுகின்றனா். அதைத்தொடா்ந்து, பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுக்கும் வைபவம் நடைபெறும். பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெறும். ஜன.3 அதிகாலை 3 மணிக்கு நடராஜா் அபிஷேகம், 8 மணிக்கு பெருந்திரி பாவாடை தீபாராதனை, ஆருத்ரா தரிசனம், காலை 11 மணிக்கு தீா்த்தவாரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை விழா குழுவினா் செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com