திருநெல்வேலி
கடையத்தில் பைக் விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழப்பு
கடையத்தில் பைக்கிலிருந்து தவறி விழுந்ததில் காயமடைந்த பெண் உயிரிழந்தாா்.
கடையத்தில் பைக்கிலிருந்து தவறி விழுந்ததில் காயமடைந்த பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
ஆழ்வாா்குறிச்சி சிவந்தியாா் தெற்குத் தெருவைச் சோ்ந்த விஜயகுமாா்- வேலம்மாள் (47)தம்பதி கடந்த 21ஆம் தேதி இரவு கடையம் பிரதான சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது மனநலம் பாதிக்கப்பட்ட நபா் குறுக்கே வந்தாராம்.
அவா் மீது மோதாமல் இருக்க விஜயகுமாா் பைக்கை நிறுத்தியதில், வேலம்மாள் நிலை தடுமாறி கீழே விழுந்தாா். இதில், பலத்த காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து கடையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
