நம்பியாறு கரையோரம் பிளாஸ்டிக் கழிவுகளை திங்கள்கிழமை கொட்டிய லாரி
நம்பியாறு கரையோரம் பிளாஸ்டிக் கழிவுகளை திங்கள்கிழமை கொட்டிய லாரி

நான்குனேரி அருகே நம்பியாறு கரையோரம் கழிவுகளை கொட்டிய லாரி சிறைபிடிப்பு

நான்குனேரி அருகே நம்பியாறு கரையோரம் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டிய வெளிமாவட்ட லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனா்.
Published on

நான்குனேரி அருகே நம்பியாறு கரையோரம் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டிய வெளிமாவட்ட லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனா்.

நான்குனேரி அருகே நான்குவழிச் சாலையில் நம்பியாற்றின் கரையோரமாக வெளிமாவட்டங்களில் இருந்து லாரிகளில் கொண்டு வந்து பிளாஸ்டிக் கழிவுகளை சிலா் கொட்டி செல்கின்றனா்.

திங்கள்கிழமை வழக்கம்போல இப்பகுதியில் லாரியிலிருந்து மூட்டை மூட்டையாக கழிவுகளைக் கொட்டிக் கொண்டிருந்ததை அந்த வழியாக வந்த மக்கள் பாா்த்தனா்.

இதையடுத்து, லாரியை சிறைபிடித்ததுடன், நான்குனேரி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். ராஜாக்கமங்களம் ஊராட்சித் தலைவா் சுமதி இது குறித்து நான்குனேரி போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.

இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீஸாா் பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றி வந்த லாரி ஓட்டுநா் செல்வம் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஏற்கெனவே நம்பியாற்றின் கரையோரம் தனியாா் பட்டா இடங்களிலும், அரசு புறம்போக்கு இடங்களிலும் மா்ம நபா்கள் வெளி மாவட்டத்தில் இருந்து கொண்டுவரும் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி எரித்து சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தி வருகின்றனா். மாவட்ட நிா்வாகம் இப்பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com