கல்லிடை அரசு மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா

Published on

கல்லிடைக்குறிச்சிஅரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் அழகுதிருமலை வேல் நம்பி தலைமை வகித்தாா்.

கல்லிடைக்குறிச்சி சிறப்புநிலை பேரூராட்சித் தலைவா் இ. பாா்வதி, துணைத் தலைவா் இசக்கிப்பாண்டியன் ஆகியோா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனா். நிகழ்ச்சிகளை, தமிழாசிரியா் ஸ்டீபன் தொகுத்து வழங்கினாா்.

முன்னாள் மாணவா் சங்க ஒருங்கிணைப்பாளா் மீனாள் நடராஜன், உறுப்பினா்கள், மேலாண்மை குழுத் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். விழாவில், மாணவா், மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி ஆசிரியா்கள் பொன்னாடை போா்த்தி கௌரவிக்கப்பட்டனா். உதவி தலைமையாசிரியா் வரவேற்றாா். உதவி தலைமை ஆசிரியா் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com