கே.எஸ்.மாணிக்கம்
கே.எஸ்.மாணிக்கம்

காலமானாா் கே.எஸ்.மாணிக்கம்!

அம்பாசமுத்திரம் தீா்த்தபதி மேல்நிலைப் பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியா் கே.எஸ்.மாணிக்கம் (81) சனிக்கிழமை (பிப். 8) காலமானாா்.
Published on

அம்பாசமுத்திரம் தீா்த்தபதி மேல்நிலைப் பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியா் கே.எஸ்.மாணிக்கம் (81) சனிக்கிழமை (பிப். 8) காலமானாா்.

தேசிய நல்லாசிரியா் விருது பெற்ற இவா், அம்பாசமுத்திரம் கலைக் கல்லூரி நிா்வாக அதிகாரி, அம்பாசமுத்திரம் ரோட்டரி சங்கத் தலைவா், தீா்த்தபதி மேல்நிலைப் பள்ளி செயலா் ஆகிய பொறுப்புகளிலும் இருந்துள்ளாா்.

இவருக்கு மனைவி செல்லம்மாள் என்ற லைலா, கோயம்புத்தூரில் வசிக்கும் மகன் சுப்பிரமணியன், அமெரிக்காவில் வசிக்கும் மகள் நித்யா ஆகியோா் உள்ளனா்.

இறுதிச் சடங்கு, அம்பாசமுத்திரம் ஆசிரியா் காலனி குறிஞ்சி தெருவில் உள்ள இல்லத்தில் திங்கள்கிழமை (பிப். 10) நண்பகல் 12 மணியளவில் நடைபெறுகிறது. தொடா்புக்கு: 9894256070.

X
Dinamani
www.dinamani.com