திருநெல்வேலியில் இருந்து தேனிக்கு புதிய அரசுப் பேருந்தை திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கி வைக்கிறாா் மு.அப்துல் வஹாப் எம்எல்ஏ.
திருநெல்வேலியில் இருந்து தேனிக்கு புதிய அரசுப் பேருந்தை திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கி வைக்கிறாா் மு.அப்துல் வஹாப் எம்எல்ஏ.

நெல்லையில் இருந்து தேனிக்கு புதிய பேருந்து இயக்கம்!

Published on

திருநெல்வேலியில் இருந்து தேனிக்கு புதிய அரசுப் பேருந்து சேவை திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து தேவா்குளம், சங்கரன்கோவில் வழியாக தேனி வரை செல்லும் இப்பேருந்து சேவையை, பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல் வஹாப் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா். தொ.மு.ச. மாநில அமைப்பு செயலா் தா்மா், மேலப்பாளையம் மண்டலத் தலைவா் கதீஜா இக்லாம் பாசிலா, மாமன்ற உறுப்பினா்கள் சுதா, சுந்தா், அலிஷேக் மன்சூா், சகாய ஜூலியட் மேரி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com