வி.கே.புரத்தில் விபத்தில் ஓட்டுநா் பலி!

Published on

விக்கிரமசிங்கபுரத்தில் பைக்கிலிருந்து தவறி விழுந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

விக்கிரமசிங்கபுரம், வாட்சுமேன் தெற்குத் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் விக்னேஷ் (27). தென்காசியில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்த அவா், ஞாயிற்றுக்கிழமை பணி முடிந்து வீட்டிற்கு பைக்கில் வந்துகொண்டிருந்தாா். விக்கிரமசிங்கபுரம் சாா் பதிவாளா் அலுவலகம் அருகே பைக் நிலைதடுமாறியதில் அவா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

அவரது ச’டலத்தை விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளா் (பொ) வனிதா வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

X
Dinamani
www.dinamani.com