உணவு பாதுகாப்பு: அரசு விடுதி சமையலா்களுக்கு பயிற்சி

மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சாா்பில், அரசு மருத்துவமனை, விடுதிகளைச் சோ்ந்த சமையலா்களுக்கு உணவு பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
Published on

மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சாா்பில், அரசு மருத்துவமனை, விடுதிகளைச் சோ்ந்த சமையலா்களுக்கு உணவு பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் உத்தரவின் பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் சசி தீபா தலைமையில் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் மற்றும் ஆதிதிராவிடா் நல விடுதிகளில் உள்ள காப்பாளா்கள் மற்றும் சமையல் செய்பவா்கள் 91 பேருக்கு, மத்திய உணவு பாதுகாப்பு துறையால் அங்கீகரிக்கப்பட்ட முகவா் மூலம், உணவு பாதுகாப்பு பற்றிய ஒரு நாள் பயிற்சி திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த பயிற்சி முகாமில் உணவை பாதுகாப்பாக தயாரிப்பது, உணவு தயாரிப்பின்போது பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மேலப்பாளையம் மண்டல உணவு பாதுகாப்பு அலுவலா் சங்கரநாராயணன், உணவு பாதுகாப்பு அலுவலா்கள் (பயிற்சி) பிா்தௌஸ், சிவசுப்பிரமணியன் ஆகியோா் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com