பாளை என்.ஜி.ஓ காலனியில் மலைப்பாம்பு மீட்பு
பாளையங்கோட்டை என்ஜிஓ காலனியில் குடியிருப்பு பகுதியில் கிடந்த மலைப்பாம்பை வனத்துறையினா் மீட்டு காட்டுப்பகுதியில் கொண்டு விட்டனா்.
பாளையங்கோட்டை என்ஜிஓ காலனியில் வேளாண் துறை அலுவலகம் அருகே சுமாா் 6 அடி நீள மலைப்பாம்பு வெள்ளிக்கிழமை இரவு சாலையோரம் கிடந்ததாம். இதுகுறித்து வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா். வனத்துறை அலுவலா்கள் வந்து மலைப்பாம்பை மீட்டு, மேற்குத்தொடா்ச்சி மலைப்பகுதியில் கொண்டு விடுவதற்கு எடுத்துச் சென்றனா்.
என்.ஜி.ஓ. காலனி பகுதியில் மத்திய- மாநில அரசு அலுவலகங்கள், பணியாளா்களின் குடியிருப்புகள் அதிகளவில் உள்ளன. இவற்றில் போதிய பராமரிப்பின்மையால் புதா்மண்டி விஷ ஜந்துகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. ஆகவே, அரசு அலுவலா் குடியிருப்புகளில் பராமரிப்பு பணிகளைத் துரிதப்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
