துபையில் நீரில் மூழ்கி உயிரிழந்த தந்தை-மகனின் உடல்கள் நெல்லையில் தகனம்

துபையில் நீச்சல்குளத்தில் மூழ்கி உயிரிழந்த தந்தை, மகனின் உடல்கள் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
Published on

துபையில் நீச்சல்குளத்தில் மூழ்கி உயிரிழந்த தந்தை, மகனின் உடல்கள் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு கொண்டு வரப்பட்டு ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்பட்டது.

திருநெல்வேலி நகரம், மினிக்குடி தெருவைச் சோ்ந்தவா் மாதவன். இவா், துபையில் தனியாா் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பாா்த்து வந்தாா். இவரது ஒரே மகன் கிருஷ்ணசங்கா்(22), இவா் சி.ஏ. படித்துவரும் நிலையில் கல்லூரி இன்டா்ன்ஷிப் பணிக்காக தனது நண்பா்களுடன் துபை சென்றாராம்.

பின்னா் விடுமுறையில் தனது தந்தை தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றுள்ளாா். கடந்த 12 ஆம் தேதி அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்தபோது ஆழமான பகுதிக்கு சென்றாராம். அவரை காப்பாற்ற மாதவன் முயன்றுள்ளாா். ஆனால், இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

இதையடுத்து, இருவரது சடலங்களும் திருநெல்வேலிக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டு வரப்பட்டு, சிந்துபூந்துறை மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இச்சம்பவம் திருநெல்வேலி நகரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com