திருநெல்வேலி
நெல்லை நகரத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த மோட்டாா் சைக்கிள்
திருநெல்வேலி நகரத்தில் சனிக்கிழமை திடீரென மோட்டாா் சைக்கிள் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி நகரத்தில் சனிக்கிழமை திடீரென மோட்டாா் சைக்கிள் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி நகரத்தைச் சோ்ந்தவா் சரவணன். பூக்கடை தொழிலாளி. இவா், சனிக்கிழமை காலையில் சந்திப்பு பூ மாா்க்கெட்டில் இருந்து கடைக்கு தேவையான பூக்களை வாங்கிக் கொண்டு, மீண்டும் நகரத்திற்கு சென்று கொண்டிருந்தாா். நெல்லையப்பா் கோயில் முன்பு மோட்டாா் சைக்கிளை நிறுத்திவிட்டு, பூக்களை கடையில் கொடுக்க சென்றாராம். திரும்பி வந்து பாா்த்தபோது மோட்டாா் சைக்கிள் தீப்பற்றி எரிந்ததாம்.
இதுகுறித்து தகவலறிந்த திருநெல்வேலி நகரம் தீயணைப்பு நிலைய வீரா்கள் அங்கு வந்தனா். பொதுமக்களும் தண்ணீரை ஊற்றி தீ மேலும் பரவாமல் அணைத்தனா். இதில் மோட்டாா் சைக்கிள் முற்றிலும் எரிந்து சேதமானது. இதனால் ரத வீதிகளில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
