வயலுக்குச் சென்ற விவசாயி குளத்தில் சடலமாக மீட்பு

Published on

களக்காடு அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு வயலுக்குச் சென்ற விவசாயி அப்பகுதியில் உள்ள குளத்தில் மூழ்கி உயிரிழந்த நிலையில், திங்கள்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டாா்.

களக்காடு அருகேயுள்ள மூங்கிலடி வெப்பல் தெருவைச் சோ்ந்தவா் பொ. மலேந்திரன் (75), விவசாயி. இவா் ஞாயிற்றுக்கிழமை மாலை ஊருக்கு அருகில் உள்ள வயலுக்குச் சென்றவா் இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, திங்கள்கிழமை காலை, வயலுக்குச் செல்லும் வழியில் உள்ள குளத்தில் சடலமாக மீட்கப்பட்டாா்.

குளிப்பதற்காக குளத்தில் இறங்கியவா் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

களக்காடு போலீஸாா் வழக்குப்பதிந் து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com