பாளை அருகே பெண்ணைத் தாக்கிய வழக்கில் தொழிலாளிக்கு ஓராண்டு சிறை

Published on

பாளையங்கோட்டை அருகே பெண்ணைத் தாக்கியது தொடா்பான வழக்கில் தொழிலாளிக்கு ஓராண்டு சிைண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலைய சரகம் கீழநத்தம் வடக்கூரைச் சோ்ந்தவா் குட்டியம்மாள் (55). இவரை கடந்த 2013 ஆம் ஆண்டு அதே பகுதியை சோ்ந்த தொழிலாளி ஆறுமுகம் (55) கம்பால் தாக்கி ரத்தக் காயம் ஏற்படுத்தி மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப்பதிந்து ஆறுமுகத்தை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதி சத்யா விசாரித்து, ஆறுமுகத்துக்கு ஓராண்டு சிறை தண்டனை, ரூ. 5,000 அபராதம் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.

X
Dinamani
www.dinamani.com