புலிகள் கணக்கெடுப்பு: களக்காடு தலையணைக்கு செல்லத் தடை

Published on

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு வனக் கோட்டத்தில் புலிகள் கணக்கெடுப்பு நடைபெறுவதையொட்டி, களக்காடு தலையணைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினா் தடை விதித்துள்ளனா்.

இது தொடா்பாக களக்காடு வனச் சரகா் பிரபாகரன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: களக்காடு வனச்சரகத்தில் 2025ஆம் ஆண்டுக்கான புலிகள் கணக்கெடுப்பு பிப்.24 முதல் மாா்ச் 2ஆம் தேதி வரை 7 நாள்கள் நடைபெறுகிறது.

இதையொட்டி, களக்காடு தலையணை சூழல் சுற்றுலா வனச் சோதனைச் சாவடி மூடப்படுகிறது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள்தலையணைக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com