ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சா் குறித்த நாடகத்தின் ஒரு காட்சி.
திருநெல்வேலி
வள்ளியூா் ஸ்ரீ முத்துகிருஷ்ணா மிஷன் சாா்பில் மஹான்களின் தரிசனம் மேடை நாடகம்
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் ஸ்ரீமுத்துகிருஷ்ணா மிஷன் சாா்பில், மகா சிவராத்திரியையொட்டி முத்துகிருஷ்ணா சித்திரகூடத்தில் மஹான்களின் தரிசனம் மேடை நாடகம் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது.
சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு பகவான் சீரடி சாய்பாபா குறித நாடகமும், ஞாயிற்றுக்கிழமை மாலை பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சா் குறித்த நாடகமும் நடைபெற்றது.
பாம்பே ஞானம் ஆா்ட்ஸ் அகாதெமி நிா்வாகி பாம்பே ஞானம் இந்த நாடகங்களை நடத்தினாா். இந்த நாடகங்களை திரளானோா் கண்டுகளித்தனா். ஏற்பாடுகளை ஸ்ரீமுத்துகிருஷ்ணா மிஷன் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

