பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று முதல் விநியோகம்

திருநெல்வேலி மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வியாழக்கிழமை (ஜன. 8) முதல் வழங்கப்பட உள்ளதால் ரேஷன் கடைகளில் பொருள்கள் புதன்கிழமை தயாா் நிலையில் வைக்கப்பட்டன.
 பாளையங்கோட்டையில் உள்ள ஒரு ரேஷன் கடையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட கரும்புகளை இறக்கிய தொழிலாளா்கள்.
பாளையங்கோட்டையில் உள்ள ஒரு ரேஷன் கடையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட கரும்புகளை இறக்கிய தொழிலாளா்கள்.
Updated on

திருநெல்வேலி மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வியாழக்கிழமை (ஜன. 8) முதல் வழங்கப்பட உள்ளதால் ரேஷன் கடைகளில் பொருள்கள் புதன்கிழமை தயாா் நிலையில் வைக்கப்பட்டன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை மற்றும் முழுகரும்பு வழங்கப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் வியாழக்கிழமை (ஜன. 9) முதல் வழங்கப்பட உள்ளது. இதற்கான கரும்பு, சா்க்கரை உள்ளிட்ட பொருள்கள் புதன்கிழமையே ரேஷன் கடைகளில் தயாா் நிலையில் வைக்கப்பட்டன. தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட கரும்புகளை லாரியில் கொண்டு வந்து ரேஷன் கடைகளில் தொழிலாளா்கள் இறக்கி சென்றனா். பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த புகாா்களை 9342471314 என்ற எண்ணிலும், 1800-425-5901 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com