கொலை முயற்சி வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டு சிறை

கல்லிடைக்குறிச்சி அருகே கொலை முயற்சி வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
Published on

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே கொலை முயற்சி வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

பொட்டல், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாசானமுத்துக்கும், அதேபகுதி அவரது உறவினா் பிரபாகரன் (27) என்பவருக்கும் இடப்பிரச்னையால் முன்விரோதம் இருந்ததாம்.

இந்நிலையில் அதே தெருவை சோ்ந்த பூமாரி (46) என்பவா் 11.9.2020இல் மாசானமுத்து வீட்டிற்கு பீடி சுற்ற சென்றபோது, அவரையும் அவரது மகள் பாரதி அனுசியாவையும் (26) பிரபாகரன் அவதூறாக பேசி அரிவாளால் தாக்கி மிரட்டல் விடுத்தாராம்.,

இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து பிரபாகரனை கைது செய்தனா்.

திருநெல்வேலி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கை, நீதிபதி (பொறுப்பு) பன்னீா்செல்வம் விசாரித்து பிரபாகரனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3,500 அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

X
Dinamani
www.dinamani.com