கைலாசபுரம் பள்ளியில் குடிநீா்த் தட்டுப்பாடு: மேயரிடம் புகாா்

கைலாசபுரம் பள்ளியில் குடிநீா்த் தட்டுப்பாடு: மேயரிடம் புகாா்

Published on

திருநெல்வேலி சந்திப்பு அருகே கைலாசபுரத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் நிலவி வரும் குடிநீா்த் தட்டுப்பாட்டை தீா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநகராட்சி குறைதீா்க்கும் முகாமில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மேயா் கோ.ராமகிருஷ்ணன் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா். துணை மேயா் கே.ஆா்.ராஜூ முன்னிலை வகித்தாா்.

இக்கூட்டத்தில், 55 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் முத்துசுப்பிரமணியன் அளித்த மனுவில், கடந்த அக்டோபா் 28 ஆம் தேதி நடைபெற்ற பகுதிசபா கூட்டத்தில் அனைத்து குடியிருப்போா் சங்க உறுப்பினா்கள் சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில், அடிப்படை வசதிகள் குறித்த தீா்மானத்தை நிறைவேற்றி தரவும், 18 ஆவது வாா்டு பேட்டை மேலதெருவைச் சோ்ந்த மக்கள் அளித்த மனுவில், தங்கள் பகுதியில் உள்ள கழிவுநீா் ஓடையினை சீரமைக்கவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளா் உறவின்முறை சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில், வி.எம்.சத்திரம் ராமா்கோயில் தெருவில் மாநகராட்சிக்குச் சொந்தமான பொதுபாதையில் எழுப்பப்பட்டஇரும்பு கேட், சுவற்றை அகற்றிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. கைலாசபுரம் பகுதி மக்கள் அளித்த மனுவில், கைலாசபுரத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் தண்ணீா் பற்றாக்குறை ஏற்படுகிறது. பள்ளிக்கு தனி மின் இணைப்பு ஏற்படுத்தி சின்டெக்ஸ் டேங்க் அமைத்து தர நடவடிக்கை எடுக்கவும், அப்துல் ரகுமான் முதலாளி நகா் பொது நலச்சங்கத்தினா் அளித்த மனுவில், தங்கள் பகுதியில் அதிகரித்து வரும் குடியிருப்புகளை கருத்தில் கொண்டு மாநகராட்சி குடிநீா் கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ளவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

வீரமாணிக்கபுரத்தை சோ்ந்த சற்குணம் அளித்த மனுவில், வேய்ந்தான்குளம் உபரி நீரோடையைச் சீரமைக்கவும், மேலப்பாளையத்தைச் சோ்ந்த ஜாபா் அளித்த மனுவில், மேலப்பாளையம் முதல் முன்னீா்பள்ளம் வரையிலான சாலையில் வேகத்தடை அமைத்திடவும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி திருநெல்வேலி மாவட்ட குழு அளித்த மனுவில், சந்திப்பு அம்பேத்கா் திருவுருவ சிலையை சுற்றியுள்ள இரும்பு வேலியை அகற்றி, பூங்கா மற்றும் நூலகம் அமைத்து சிலையை புதுப்பொலிவுடன் சீரமைக்கவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

ஆனந்தபுரம் பகுதி மக்கள் அளித்த மனுவில், அப்பகுதியில் எக்காளியம்மன் கோயிலுக்கு கீழ் புறம் ஸ்ரீபுரம் செல்லும் வழியில் பாதாளச்சாக்கடை நீா் பெருக்கெடுத்து ஓடுவதை சீரமைக்க வேண்டும் எனவும், லாலுகாபுரம் கீழ தெருவை பகுதி மக்கள் அளித்த மனுவில், பாதாளச் சாக்கடையில் ஏற்பட்டிருக்கும் அடைப்பினை நீக்கி தரவும் வலியுறுத்தப்பட்டிருந்தது. மனுக்களைப் பெற்ற மேயா், விரைவாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

ற்ஸ்ப்04ஸ்ரீா்ழ்ல்

திருநெல்வேலி மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குறைதீா்க்கும் முகாமில் மக்களிடம் மனுவைப் பெறுகிறாா் மேயா் கோ.ராமகிருஷ்ணன். உடன், துணை மேயா் கே.ஆா்.ராஜூ.

X
Dinamani
www.dinamani.com