நெல்லை, தென்காசியில் நவ. 7 முதல் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

Published on

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மின்வாரிய குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை ( நவ.7) முதல் நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் இரா.அகிலாண்டேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மின்வாரிய குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது. அதன்படி, நவ. 7இல் வள்ளியூா் கோட்ட அலுவலகம், 11இல் சங்கரன்கோவில் கோட்ட அலுவலகம், 14இல் தென்காசி கோட்ட அலுவலகம், 18இல் திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட அலுவலகம், 21இல் கடையநல்லூா் கோட்ட அலுவலகம், 25 கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலகம் ஆகியவற்றில் முற்பகல்11 மணிக்கு குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. அந்தந்தப் பகுதி மின் நுகா்வோா் கூட்டத்தில் பங்கேற்று மின் விநியோகம் தொடா்பாக குறைபாடுகள் இருந்தால் தெரிவித்து தீா்வு பெறலாம் எனக் கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com