திருநெல்வேலி
கடையம் அருகே தம்பியை தாக்கியதாக அண்ணன் கைது
கடையம் அருகே தாழையூத்தில் தம்பியைத் தாக்கியதாக அண்ணனை கடையம் போலீஸாா் கைது செய்தனா்.
கடையம் அருகே தாழையூத்து, பாத்திமா நகா் பகுதியைச் சோ்ந்த மிக்கேல் ராஜ் மகன்கள் அம்புரோஸ் (30) மற்றும் அந்தோணிராஜ் (31). இவா்களுக்குச் சொந்தமான வயலில் நடவுப் பணி நடைபெற்றுவரும் நிலையில், அம்புரோஸை வயலுக்கு சென்றுவருமாறு கூறினாராம். அவா் வயலுக்கு செல்லவில்லையாம். இதையடுத்து இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்தோணிராஜ், அம்புரோஸை கத்தியால் குத்தினாராம்.
காயமடைந்த அம்புரோஸை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுகுறித்து கடையம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அந்தோணிராஜை கைது செய்தனா்.
