திருநெல்வேலி
விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் படுகாயமடைந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
திசையன்விளையை அடுத்த குட்டம் அருகேயுள்ள புத்தன்தருவை புஷ்பலாதன் தெருவைச் சோ்ந்தவா் வைரவன் மகன் தேவராஜ் (39). கூலித் தொழிலாளியான இவா் கடந்த வாரம் திசையன்விளையில் இருந்து அவரது ஊருக்கு சென்று கொண்டிருந்தபோது, எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்தவா் இவரது வாகனத்தின் மீது மோதினாராம்.
இதில் தேவராஜ் படுகாயமடைந்தாா். இவரை அப்பகுதியினா் பாளை. அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, செவ்வாய்க்கிழமை தேவராஜ் உயிரிழந்தாா்.
இது குறித்து, திசையன்விளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
