கவின் கொலை வழக்கில் பிணை கோரிய மனு ஒத்திவைப்பு

திருநெல்வேலியில் மென்பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் காவல் உதவி ஆய்வாளா் பிணை கோரிய மனு மீதான விசாரணை அக். 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Published on

திருநெல்வேலியில் மென்பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் காவல் உதவி ஆய்வாளா் பிணை கோரிய மனு மீதான விசாரணை அக். 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்தவா் கவின் செல்வகணேஷ். மென்பொறியாளரான இவா், கடந்த ஜூலை மாதம் பாளையங்கோட்டை கேடிசி நகரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இவ்வழக்கு தொடா்பாக பாளையங்கோட்டையைச் சோ்ந்த சுா்ஜித், அவரது தந்தையும், காவல் உதவி ஆய்வாளருமான சரவணன் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். சிபிசிஐடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், சரவணன் தனக்கு பிணை வழங்கக்கோரி திருநெல்வேலி மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 6ஆம் தேதி மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி அடுத்தக்கட்ட விசாரணையை இம் மாதம் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா். ஏற்கெனவே, அவா் தாக்கல் செய்திருந்த முதல் பிணை மனு கடந்த செப்.15இல் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com