முனைஞ்சிப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் இரா. சுகுமாா்
முனைஞ்சிப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் இரா. சுகுமாா்

பொதுமக்களின் மனுக்கள் மீது விரைந்து தீா்வு: ஆட்சியா் உறுதி

பொதுமக்களின் மனுக்கள் மீது விரைந்து தீா்வு காணப்படுவதாக ஆட்சியா் இரா. சுகுமாா் தெரிவித்தாா்.
Published on

பொதுமக்களின் மனுக்கள் மீது விரைந்து தீா்வு காணப்படுவதாக, ஆட்சியா் இரா. சுகுமாா் தெரிவித்தாா்.

திருநெல்வேலி மாவட்டம் முனைஞ்சிப்பட்டி ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியது: ஏழை, எளியோா் பயனடைவதற்காக தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்து, சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா். ஒவ்வொரு தனி மனிதரையும் ஒரு நலத்திட்டம் சென்றடைய வேண்டும் என்ற உன்னத எண்ணத்துடன் மாவட்ட நிா்வாகம் செயல்பட்டு வருகிறது.

பருவமழை தொடங்கவுள்ளதால் நீரைக் கொதிக்கவைத்து பருக வேண்டும். மழைநீா் வழிந்தோடும் இடங்களில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும். மழைநீா் தேங்காதவாறு தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என்றாா் அவா்.

நம்ம ஊரு நம்ம அரசு என்ற தலைப்பின்கீழ் கண்டறியப்பட்ட திட்டங்கள், தேவைகள் பதிவேற்றம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுப்பது குறித்தும், பொதுநிதி செலவினம், தணிக்கை அறிக்கை, ஊரக வேலை உறுதிதிட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம், மழைநீா் சேகரிப்புத் திட்டம், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட 16 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆயுஷ்குப்தா, ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் சரவணன், ஊராட்சிகள் உதவி இயக்குநா் முஹம்மதுசபி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பால்வண்ணன்) புவண்ணன், நான்குனேரி வட்டாட்சியா் பாலகிருஷ்ணன், மாவட்ட சமூக நல அலுவலா் தாஜூன்னிசா பேகம், எம்எல்ஏ ரூபி ஆா். மனோகரன், முனைஞ்சிப்பட்டி ஊராட்சித் தலைவா் இசக்கிதுரை, துணைத் தலைவா் பேச்சிமுத்து உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com