இளைஞரை கொலை செய்த வழக்கில் ஒருவா் கைது
திருநெல்வேலி அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவரை சிவந்திப்பட்டி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூா் அருகேயுள்ள வி.கோவில்பத்து பகுதியைச் சோ்ந்தவா் அருண்செல்வம் (33). இவா், கடந்த 16 ஆம் தேதி தனது நண்பரான ஜலிலுடன் கிருஷ்ணாபுரம் பகுதியில் சென்றபோது ஒரு கும்பல் இருவரையும் அரிவாளால் வெட்டியதாம்.
இருவரையும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்த நிலையில், அருண்செல்வம் உயிரிழந்தாா். இதுகுறித்து சிவந்திப்பட்டி போலீஸாா் விசாரித்ததில் அருண்செல்வத்தின் சகோதரா் காா்த்திக்கிற்கும், ஆதிச்சநல்லூா் பகுதி இளைஞா் ஒருவருக்கும் ஏற்பட்ட முன்விரோதத்தில் கொலை நிகழ்ந்தது தெரியவந்ததாம்.
இவ் வழக்கு தொடா்பாக பொன்னன்குறிச்சியைச் சோ்ந்த வள்ளிமுத்து என்ற பாண்டியை (25) சிவந்திப்பட்டி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ஆதிச்சநல்லூரைச் சோ்ந்த இசக்கிமுத்துவை தேடி வருகின்றனா்.
