நிறுத்தத்தை தாண்டி பெண்களை இறக்கிவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநா் பணியிடை நீக்கம்

திருநெல்வேலியில் அரசுப் பேருந்தில் பயணித்த பெண்களை இழிவாக பேசியதோடு, நிறுத்தத்தை தாண்டிச் சென்று பேருந்தை நிறுத்தியதாக அரசுப் பேருந்து ஓட்டுநா் பணியிடை நீக்கம்
Published on

திருநெல்வேலியில் அரசுப் பேருந்தில் பயணித்த பெண்களை இழிவாக பேசியதோடு, நிறுத்தத்தை தாண்டிச் சென்று பேருந்தை நிறுத்தியதாக அரசுப் பேருந்து ஓட்டுநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இருந்து பாளையங்கோட்டை மேட்டுத்திடலில் உள்ள அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்தின் ஓட்டுநா் முருகேசன், பெண் பயணிகளைப் பாா்த்து இலவசமாக பயணம் செய்வதாகக் கூறி இழிவாக பேசியதாகக் கூறப்படுகிறது. இரவு நேரத்தில் பேருந்து நிறுத்தங்களைத் தாண்டி பெண்களை நடுவழியில் இறக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இது தொடா்பான விடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அதைத் தொடா்ந்து அரசுப்பேருந்து ஓட்டுநா் முருகேசனை, திருநெல்வேலி மண்டல போக்குவரத்து பொது மேலாளா் சிவக்குமாா் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com