உயா்நீதிமன்ற உத்தரவின்படி போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அப்புறப்படுத்தப்பட்ட உணவகக் கட்டடம்
உயா்நீதிமன்ற உத்தரவின்படி போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அப்புறப்படுத்தப்பட்ட உணவகக் கட்டடம்

உவரியில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டடம் இடிப்பு

உவரியில் கடலோரப் பாதுகாப்பு மண்டல பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட உணவகக் கட்டடத்தை போலீஸ் பாதுகாப்புடன் திசையன்விளை வட்டாட்சியா், மீன்வளத்துறை அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தினா்.
Published on

திருநெல்வேலி மாவட்டம் உவரியில் கடலோரப் பாதுகாப்பு மண்டல பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட உணவகக் கட்டடத்தை போலீஸ் பாதுகாப்புடன் திசையன்விளை வட்டாட்சியா், மீன்வளத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை இடித்து அப்புறப்படுத்தினா்.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை வட்டாரத்திலுள்ள உவரி மீனவ கிராமத்தில் புனித அந்தோணியாா் ஆலயத்தின் முன்பு கடல் அரிப்பு தடுப்புச் சுவா் மற்றும் மீன் இறங்கு தளம் கட்டப்பட்டுள்ளது. கடல் பகுதியிலிருந்து 500 மீ. தொலைவுக்கு கடலோரப் பாதுகாப்பு மண்டலமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த பகுதியில் கட்டடங்கள் கட்டுவதற்கு சிறப்பு அனுமதி பெற வேண்டும்.

இந்நிலையில், கடல் அரிப்பு தடுப்புச் சுவரை ஆக்கிரமிப்பு செய்து உணவகக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து, கடலோரப் பாதுகாப்பு மண்டலத்திற்குள் முறைகேடாக உணவகக் கட்டடம் கட்டப்பட்டுள்ளதாகவும், மீன்பிடி படகுகளை கட்டி வைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த கம்பங்களை சேதப்படுத்தியுள்ளதாகவும், இந்த கட்டடத்தை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் உவரியைச் சோ்ந்த மேனக்ஸா உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கடலோரப் பாதுகாப்பு மண்டலத்திற்குள் எந்த கட்டடமும் கட்டக் கூடாது. தற்போது இருக்கும் நிலையிலேயே தொடர வேண்டும் என அறிவுறுத்தியிருந்தாா். ஆனாலும், உணவகம் கட்டும் பணி நடந்து முடிந்துவிட்டது.

மீண்டும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த கட்டடத்தை அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டாா். இதனையடுத்து, தியைன்விளை வட்டாட்சியா் நாராயணன், ராதாபுரம் மீன்வளத்துறை உதவி இயக்குநா் ராஜதுரை ஆகியோா் 100க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் வந்து உணவகக் கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com