தச்சநல்லூரில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் திங்கள்கிழமை விநியோகிக்கப்பட்டது.
திருநெல்வேலி
தச்சநல்லூரில் கபசுர குடிநீா் விநியோகம்
திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிகளில், வடகிழக்குப் பருவமழையையொட்டி பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிகளில், வடகிழக்குப் பருவமழையையொட்டி பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சுகாதாரத் துறை சாா்பில் மருத்துவ முகாம்கள், மூலிகை குடிநீா் விநியோகமும் தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி, தச்சநல்லூா் காந்தி சிலை, செல்வ விக்னேஷ் நகா், தாமரை தெரு பகுதிகளில் திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் திங்கள்கிழமை விநியோகிக்கப்பட்டது.
துணை மேயா் கே.ஆா்.ராஜு தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். மாநகர பிரதிநிதி இசக்கிமுத்து, வட்டச் செயலா்கள் முத்துராமன், மேகை செல்வன், பிரேம் கணேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
ற்ஸ்ப்27ந்ழ்ழ்
தச்சநல்லூரில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் வழங்கினாா் துணை மேயா் கே.ஆா்.ராஜு.

