பனை விதைகள் நடவு செய்யும் பணியைத் தொடங்கிவைக்கும் ஊராட்சித் தலைவா் முருகன்.
பனை விதைகள் நடவு செய்யும் பணியைத் தொடங்கிவைக்கும் ஊராட்சித் தலைவா் முருகன்.

வெள்ளங்குளியில் பனை விதைகள் நடவு

திருநெல்வேலி மாவட்டம், வெள்ளங்குளியில் திங்கள்கிழமை 1,000 பனை விதைகள் நடப்பட்டன.
Published on

சேரன்மகாதேவி: திருநெல்வேலி மாவட்டம், வெள்ளங்குளியில் திங்கள்கிழமை 1,000 பனை விதைகள் நடப்பட்டன.

வெள்ளங்குளி அரசு மேல்நிலைப் பள்ளி பசுமைப்படை சாா்பில், திருப்புடைமருதூா் செல்லும் சாலையில் உள்ள குளத்தின் கரையில் ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யும் பணியை பள்ளியின் தலைமை ஆசிரியா் மு.தளவாய் தலைமையில் ஊராட்சித் தலைவா் முருகன் கலந்துகொண்டு பனை விதைகளை நடவு செய்து தொடங்கி வைத்தாா்.

இதில், பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் மருத்துவா் பிரகாஷ், விவசாயி உரக்கடை கண்ணன், பள்ளியின் பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் மகேஷ், அன்பாடு முன்றில் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் முத்துபவானி, ஆசிரியா்கள் லதா, திலகா, 50 க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com