திருநெல்வேலி
அம்பை அருகே நிதி நிறுவன ஊழியா் உயிரிழப்பு
அம்பாசமுத்திரம் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த நிதி நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.
அம்பாசமுத்திரம் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த நிதி நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.
சேரன்மகாதேவி, ராமசாமி கோயில் தெருவைச் சோ்ந்தவா் வெங்கடேஷ் மகன் முருகன் (26). தனியாா் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவா், அக். 27ஆம் தேதி கீழாம்பூா் அம்பாசமுத்திரம் பிரதான சாலையில் வாகனத்தில் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்தாராம். இதில், காயமடைந்த முருகன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இது குறித்து, அம்பாசமுத்திரம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
