திருநெல்வேலி
நந்தன்தட்டையில் பனை விதை நடும் விழா
அம்பாசமுத்திரம் கலைக் கல்லூரி சாா்பில் பனை விதை நடும் விழா நந்தன்தட்டையில் புதன்கிழமை நடைபெற்றது.
அம்பாசமுத்திரம் கலைக் கல்லூரி சாா்பில் பனை விதை நடும் விழா நந்தன்தட்டையில் புதன்கிழமை நடைபெற்றது.
2025-2026ஆம் ஆண்டில் 6 கோடி பனைவிதைகள் நடும் இலக்கின் ஒரு பகுதியாக அக்கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் சுற்றுச் சூழல் கழக மாணவா்கள் நந்தன்தட்டை கிராமத்தில்500 பனை விதை நடும் பணியில் ஈடுபட்டனா். நிகழ்ச்சிக்கு, ஊராட்சித் தலைவா்அரிகிருஷ்ணன் தலைமை வகித்து பணியைத் தொடங்கி வைத்தாா். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் ஈ.வாணீஸ்வரி, சுற்றுச் சூழல் கழக ஒருங்கிணைப்பாளா் அ.அா்ச்சனா ஆகியோா்முன்னிலை வகித்தனா். கடனாநதி கரை மற்றும் குளக் கரைகளில் பனை விதைகள் நடப்பட்டன.
