மின் இணைப்புக்கு லஞ்சம்: 2 அதிகாரிகளுக்கு ஈராண்டு சிறை
தற்காலிக மின் இணைப்பு வழங்க லஞ்சம் பெற்றது குறித்த வழக்கில், மின் வாரிய அதிகாரிகள் இருவருக்கு 2 ஆண்டுகள் சிைண்டனை விதித்து திருநெல்வேலி சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
ரெட்டியாா்பட்டி அருகே உள்ள ஸ்பென்சா் காலனியை சோ்ந்த கோமதிநாயகம் மகன் குத்தால விசேஷ். இவா், கடந்த 2009 ஆம் ஆண்டு பாளையங்கோட்டை டக்கரம்மாள்புரம் அருகே உள்ள தனது இடத்தில் புதிய வீடு கட்டுவதற்காக தற்காலிக மின் இணைப்பு கோரி மனுவை தனது தந்தை கோமதிநாயகம் மூலம் பெருமாள்புரம் மின் வாரிய உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தில் மனு கொடுத்தாா். அப்போது அங்கு பணியில் இருந்த உதவி செயற்பொறியாளா் சிவக்குமாா், வணிக உதவியாளா் உதயகுமாா் ஆகியோா் மின் இணைப்பு வழங்க ரூ.7,500 லஞ்சமாக கேட்டனராம்.
இதுகுறித்து அவா் திருநெல்வேலி ஊழல் தடுப்பு - கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் புகாரளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து, உதயகுமாா், சிவக்குமாா்ஆகி யோா் லஞ்சம் வாங்கியதை உறுதிசெய்து இருவரையும் கைது செய்தனா். திருநெல்வேலி ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதி சுப்பையா விசாரித்து, சிவக்குமாா் , உதயகுமாா் ஆகிய இருவருக்கும் தலா 2 ஆண்டுகள் சிைண்டனையும், தலா ரூ.10,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் ராஜகுமாரி ஆஜரானாா்.
