மரக்கன்று நடும் விழாவில் பங்கேற்றோா்.
திருநெல்வேலி
மேட்டூா் பள்ளியில் மரக்கன்று நடும் விழா
கடையம் அருகே உள்ள மேட்டூா் டீ.டி.டீ.ஏ. தொடக்கப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
கடையம் அருகே உள்ள மேட்டூா் டீ.டி.டீ.ஏ. தொடக்கப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பள்ளித் தாளாளரும், மேட்டூா் சேகர தலைவருமான ஜோயல் சாம் மொ்வின் தலைமை வகித்தாா். சி.எஸ்.ஐ. திருநெல்வேலி திருமண்டல நடுநிலைப் பள்ளிகளின் மேலாளா் ஸ்டீபன் முல்லா் கலந்து கொண்டு மரம் நடுவதின் அவசியம் குறித்து பேசினாா்.
விழாவில், அனைத்து மாணவா்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. தலைமையாசிரியை விஜிலா ஜூலியட் ரூபா நன்றி கூறினாா்.