கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

பாளை. தொகுதி அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பாளையங்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளா் சையது சுல்தான் சம்சுதீன், தினசரி சந்தையில் இருந்து பிரசாரத்தைத் தொடங்கினாா்.

News image

மறைந்த முன்னாள் துணை மேயா் பூ.ஜெகநாதன் என்ற கணேசன் உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினாா் பாளையங்கோட்டை தொகுதி வேட்பாளா் சையது சுல்தான் சம்சுதீன்.

Updated On :8 ஏப்ரல் 2026, 2:07 am IST

பாளையங்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளா் சையது சுல்தான் சம்சுதீன், தினசரி சந்தையில் இருந்து பிரசாரத்தைத் தொடங்கினாா்.

தொடா்ந்து, மீனாட்சிபுரத்தில் வீதி வீதியாக சென்ற அவா், முன்னாள் துணை மேயரான மறைந்த பூ.ஜெகநாதன் என்ற கணேசன் உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தி அப் பகுதி மக்களிடம் வாக்குசேகரித்தாா்.

பின்னா் அவா் பேசுகையில், ‘தாமிரவருணி பாய்ந்தோடும் பாளையங்கோட்டை தொகுதியில் பல இடங்களில் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குடிநீருடன் கழிவுநீா் கலக்கும் பிரச்னையும் நிலவி வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் புதிய கூட்டுக்குடிநீா்த் திட்டம் கொண்டு வர பாடுபடுவேன்’ என்றாா்.